ஆசிரியர் கல்விக்
கழகம் துவான்கு பைனூன் வளாகம்
கட்டுரை எழுதும்
போட்டி 2019
விதிமுறைகள்:
- போட்டியில் கலந்துகொள்ளும்
பயிற்சி ஆசிரியர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றனைத் தெரிவு செய்து
கட்டுரை ஒன்றனை எழுத வேண்டும்.
- கட்டுரை விடைத்தாளில்(Test Pad) 1000 சொற்களுக்கு மிகாமல் கையெழுத்தில்
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டுரை முழுக்க முழுக்கப் போட்டியாளர்களின் சொந்தப்
படைப்பாகவும் பல்வேறு மூலங்களின் துணைக்கொண்டும் ஆய்வின் அடிப்படையிலும் எழுதப்பட
வேண்டும்.
- முகப்பில் முறையெண் (Angka Giliran) மட்டுமே குறிப்பிடப்பட வேண்டும்.
- கட்டுரையைக் கடித உரையிலிட்டுத் தமிழ்த்துறையில்
வைக்கப்பட்டுள்ளப் பெட்டியில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பரிசுத் தொகை:
முதலாம் பரிசு: RM200
இரண்டாம் பரிசு: RM100
மூன்றாம் பரிசு: RM75
- கட்டுரையை ஒப்படைக்க வேண்டிய இறுதிநாள்: 5 சூலை 2019. நேரம்: 12.30 மதியம்.
- இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்படைக்கப்படாத கட்டுரை
போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
- பயிற்சி ஆசிரியர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்குபெறுவது
கட்டாயமாகும்.
தலைப்புகள்:
1. Prezzi நழுவப்படைப்பு 21ஆம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தலுக்கு நன்மை அளிக்கின்றது.
2. இடுபணிகள் பயிற்சி
ஆசிரியர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
3.
மொழிவிளையாட்டுச்
செயலிகள்.
4.
பயிற்சி ஆசிரியர்களிடையே
தமிழ்மொழி ஓர் ஆய்வு.
5.
ஆய்வு நோக்கில் மலேசியத்
தமிழ்ப் பள்ளிகளுக்கான கலைத்திட்டம்.